லண்டன்:இங்கிலாந்துக்கு சுற்றுப்பயண் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாடிவருகிறது. இத்தொடரில், மூன்று போட்டிகள் நிறைவுற்ற நிலையில், 1-1 என்ற கணக்கில் தொடர் சமநிலைப்பெற்றது. நான்காவது டெஸ்ட் போட்டி தற்போது, இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.
இதற்கிடையே, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கரோனா தொற்று இருப்பது நேற்று (செப். 6) கண்டறியப்பட்டது. மேலும், அவர் உள்பட பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர், பிசியோதெரபிஸ்ட் நிதின் படேல் ஆகியோர் விடுதி அவர்களின் அறையில் தனிமைப்படுத்தப்பட்டு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அடுத்த போட்டிக்கு செல்லமாட்டார்கள்
இதில், அருண், ஸ்ரீதர் ஆகியோருக்கும் கரோனா தொற்று இருப்பது இன்று (செப். 6) உறுதிச்செய்யப்பட்டுள்ளது. இதனால், ரவி சாஸ்திரி உள்பட நால்வரும் மான்செஸ்டர் நகரில் நடக்கும் இங்கிலாந்து அணியுடனான ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கு, இந்திய அணியோடு பயணிக்க மாட்டார்கள் என்றும் லண்டன் நகரத்திலேயே 10 நாள்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.