மும்பை: திரையுலகில் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக 51ஆவது தாதா சாகேப் பால்கே விருது ரஜினிக்கு அறிவிக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி இந்த விருது ஒன்றிய தகவல் மற்றும் ஒலிப்பரப்புத் துறையால் அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து, தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா கரோனா தொற்று பரவல் காரணமாக தள்ளிவைக்கப்பட்ட நிலையில், நேற்று (அக்.25) டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடைபெற்றது. அப்போது துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருதினை வழங்கினார்.
அதிர்வலைகள் ஏற்படுத்துபவர் ரஜினி
இதனையடுத்து, ரஜினிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், கிரிக்கெட் ஜாம்பாவன் சச்சின் டெண்டுல்கர், ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சச்சின் - ரஜினியின் செல்ஃபி சச்சின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "ஒரு சில நடிகர்களால் மட்டுமே அவர்களின் திரைப்படம் வெளியாகும்போதெல்லாம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்த முடியும்.
ரசிகர்கள் குதூகலம்
தலைவர் ரஜினிகாந்த் அதை ஒவ்வொரு முறையும் செய்து வருகிறார். தற்போதும் தொடர்ந்து ரசிகர்களை அவரின் படங்கள் மூலம் கவர்ந்து வருகிறார். அவர் தாதா சாகேப் பால்கே விருது வாங்கியதற்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
சச்சின் டெண்டுல்கர் ட்வீட் 'தலைவா' எனக் குறிப்பிட்டு சச்சின் வாழ்த்து தெரிவித்ததை அடுத்து, ரஜினி ரசிகர்கள் சச்சினின் ட்வீட்டை அதிகம் பகிர்ந்து மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: தமிழ்நாடு அரசின் விருது முதல் தாதா சாகேப் பால்கே விருது வரை ரஜினி!