தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

வர்ணனைக்கு திரும்பிய ரிக்கி பாண்டிங் - ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்ட்டீஸ் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில் வர்ணனையில் ஈடுபட்டிருந்த ரிக்கி பாண்டிங் நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மீண்டும் வர்ணனைக்கு திரும்பினார்.

ரிக்கி பாண்டிங்-க்கு நெஞ்சுவலி; மீண்டும் வர்ணனைக்குத் திரும்பினார்
ரிக்கி பாண்டிங்-க்கு நெஞ்சுவலி; மீண்டும் வர்ணனைக்குத் திரும்பினார்

By

Published : Dec 3, 2022, 12:10 PM IST

பெர்த் (ஆஸ்திரேலியா): ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று பெர்த்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் ஜாம்பாவன் ரிக்கி பாண்டிங் உள்ளிட்டோர் வர்ணனை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது பேசிக்கொண்டிருந்த ரிக்கி பாண்டிங்குக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் ரிக்கி பாண்டிங் இன்று மீண்டும் வர்ணனைக்கு திரும்பி உள்ளார்.

இதுகுறித்து அவர் ட்விட்டரில்,”என்னுடையை சிறுவயது நண்பன் ஜேஎல் என்னை நன்றாக கவனித்துகொண்டார். நான் இன்று காலை மிகவும் புத்துணர்வுடன் இருக்கிறேன். நேற்றைய சிறந்த பகுதியை தவறவிட்ட பின்னர், டெஸ்ட் கிரிக்கெட்டில் இன்று நல்ல நாளுக்கு தயாராகிவிட்டேன்” என பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:FIFA World Cup: தொடரில் இருந்து வெளியேறினாலும் கேமரூன் படைத்த சாதனை!

ABOUT THE AUTHOR

...view details