நடப்பு ஐபிஎல் தொடரின் 17வது போட்டி, சென்னை சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் இடையிலான இந்த போட்டியில் டாஸ் வென்று பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ், திணறலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
பஞ்சாப் அணிக்கு 132 ரன்களை இலக்காக நிர்ணயித்த மும்பை அணி! - பஞ்சாப் அணி
சென்னை: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட் இழப்புக்கு, மும்பை அணி 131 ரன்களை எடுத்துள்ளது.
இந்த போட்டியில் தொடக்க வீரர் குவின்டன் டீ காக் 3 ரன்களில் வெளியேறினார். இஷான் கிஷன் 6 ரன்களில் பெவிலியன் திருப்பினார். இருப்பினும், அணியின் கேப்டன் ரோகித் சர்மா தனது சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி அரைசதம் அடித்தார். இதில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸ்கள் அடக்கம். அவருக்கு இணையாக சூர்யகுமார் யாதவும் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.
இறுதியாக, ஆறு விக்கெட் இழப்புக்கு மும்பை அணி 131 ரன்களை எடுத்தது. பஞ்சாப் அணியின் முருகன் அஸ்வினுக்கு பதிலாக ரவி பிஸ்னோய் இன்றைய போட்டியில் களமிறக்கப்பட்டார். அதற்கு நியாயம் செய்யும் வகையில் அவர் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தியுள்ளார். 4 ஓவர்களில் 21 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளையும் அவர் வீழ்த்தியுள்ளார்.