டுனெடின்: பாகிஸ்தான் மகளிர் அணி நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 தொடர் மற்றும் 3 ஒருநாள் தொடர் விளையாடி வருகிறது. இத்தொடர் கடந்த 3ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், 2 டி20 போட்டிகள் முடிவடைந்துள்ளன.
இதில் கடந்த 3ஆம் தேதி டுனெடின், யுனிவர்சிட்டி ஒவல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், பாகிஸ்தான் மகளிர் அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. இந்நிலையில், அதே மைதானத்தில் நடைபெற்ற 2வது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் திரீல் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.
இந்திய நேரப்படி இன்று காலை 5.30 மணிக்கு தொடங்கிய இந்த போட்டியில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களம் இறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 137 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக தொடக்க வீரரான முனீபா அலி 35 ரன்களும், அலியா ரியாஸ் 32 ரன்களும் எடுத்தனர். நியூசிலாந்து பந்து வீச்சு அதிகபட்சமாக சார்பில் ஃபிரான் ஜோனாஸ் மற்றும் மோலி பென்ஃபோல்டு தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர்.