தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

2023 ஒருநாள் உலகக்கோப்பை:18 வீரர்கள் கொண்ட அணியை அறிவித்த ஆஸ்திரேலியா! - South Africa tour

இந்தியாவில் வரும் அக்டோபர் 5ம் தேதி தொடங்கவுள்ள ஒருநாள் உலகக் கோப்பைக்கான 18 பேர் கொண்ட அணியை ஆஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலியா
australia

By

Published : Aug 7, 2023, 4:05 PM IST

ஹைதராபாத்: 2023 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையின் 13வது எடிஷன் இந்தியாவில் வரும் அக்டோபர் 5ம் தேதி முதல் நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை, நெதர்லாந்து, பாகிஸ்தான், வங்கதேசம் உட்பட 10 அணிகள் விளையாட உள்ளது.

இந்நிலையில், 18 பேர் கொண்ட உத்தேச அணியை ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. இந்த அணியில் மார்னஸ் லபுசன் இடம் பெறவில்லை. உலகக்கோப்பைத் தொடரின் முதல் போட்டியாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியாவுக்கு எதிராக விளையாட உள்ளது. ஆஸ்திரேலியா அணி இதுவரை 1987, 1999, 2003, 2007, 2015 என ஐந்து முறை ஒருநாள் உலகக் கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒரு நாள் உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன்பு, இந்த அணி தென் ஆப்பிரிக்கா அணியுடன் 5 மற்றும் இந்தியாவுடன் 3 ஒருநாள் போட்டிகளில் மோத உள்ளது. இதில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடர் செப்டம்பர் 7ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் ஆல் ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் அணியில் இடம்பெற மாட்டார்.

அதே நேரத்தில் ஆஷஸ் கடைசி டெஸ்டின்போது காயம் ஏற்பட்ட ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ், இந்தியா சுற்றுப்பயணம் தயாராகும் விதத்தில் தென் ஆப்பிரிக்கா ஒரு நாள் தொடரில் இணைவார். இவர் இல்லாத அதே அணிக்கு எதிரான டி20 தொடரில் மிட்செல் மார்ஸ் கேப்டனாக இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2023 ஒருநாள் உலகக் கோப்பைக்கான 18 பேர் கொண்ட ஆஸ்திரேலியா அணி:

டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் மார்ஸ், கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி, கிளென் மேக்ஸ்வேல், மார்கஸ் ஸ்டோனிஸ், ஆரோன் ஹார்டி, ஜோஷ் இங்கிலிஸ், பேட் கம்மின்ஸ் (கேப்டன்), தன்வீர் சங்கா, ஆஷ்டன் அகர், ஆடம் ஜம்பா, மிட்செல் ஸ்டார்க், சீன் அபோட், ஜோஷ் ஹேசில்வுட், நாதன் எல்லிஸ்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கான ஆஸ்திரேலியா அணி:

மிட்செல் மார்ஷ் (கேப்டன்), சீன் அபோட், ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், டிம் டேவிட், நாதன் எல்லிஸ், ஆரோன் ஹார்டி, டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், ஸ்பென்சர் ஜான்சன், க்ளென் மேக்ஸ்வெல், மாட் ஷார்ட், ஸ்டீவ் ஸ்மித், மார்கஸ் ஸ்டோனிஸ், ஆடம் ஜாம்பா.

இதையும் படிங்க:இந்தியாவில் உலக கோப்பை கிரிக்கெட் விளையாட பாகிஸ்தான் அணிக்கு அனுமதி... பாகிஸ்தான் அரசு!

ABOUT THE AUTHOR

...view details