ஹைதரபாத்:பாகிஸ்தான் அணி உலகக் போப்பை போட்டிகளுக்கு முன்பாக, நட்பு ரீதியான போட்டிகளுக்காக ஐக்கிய அரபு நாடுகளுக்குச் செல்ல திட்டமிட்டு இருந்தது. ஆனால், இந்தியா வருவதற்கான விசா கிடைக்கப்படாத காரணத்தினால் பாகிஸ்தான் அணியின் பயணம் தாமதமாகி உள்ளது.
முன்னதாக, இந்தியாவின் ஹைதாரபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடக்கவிருக்கும் நியூசிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி போட்டி, ஐக்கிய அமீரகம் உடனான நட்பு ரீதியான விளையாட்டிற்குப் பிறகு, தூபாயில் இருந்து இந்தியா வர திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், தற்போது பாகிஸ்தான் அணி துபாய்க்குச் செல்லாமல், லாகூரில் இருந்து இந்தியா வர இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்காக இந்தியா வரும் வெளிநாட்டு அணிகளுள், விசா கிடைக்காமல் இருப்பது பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மட்டும்தான் என கூறப்படுகிறது. இந்த நிலை இரு நாடுகளுக்கு மத்தியில் நிலவும் அரசியல் சூழலை நினைவூட்டுவதாக கூறப்படுகின்றன.
மேலும், தற்போது உள்ள இந்தியா - பாகிஸ்தான் அணிகள் கடந்த 11 ஆண்டுகளில், 2012ஆம் ஆண்டு ஒரே ஒரு முறைதான் ஒருநாள் தொடரை விளையாடியுள்ளனர். இதுவரை இந்தியா அணி, பாகிஸ்தான் சென்று விளையாடாத நிலையில், இந்த ஆண்டிற்கான ஆசியக் கோப்பை விளையாட்டுப் போட்டி பாகிஸ்தானில் நடைபெறுவதாக திட்டம் இருந்தது.