தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

சதம் அடித்த ஸ்ரேயாஷ் ஐயர்.. டிரா செய்த நியூசிலாந்து!

இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இந்தப் போட்டியில் அதிரடி காட்டிய ஸ்ரேயாஷ் ஐயர் முதல் இரண்டு இன்னிங்களில் முறையே 105, 65 ரன்கள் குவித்தார்.

India
India

By

Published : Nov 29, 2021, 7:40 PM IST

கான்பூர் : இந்திய மண்ணில் சுற்றுப் பயணம் செய்து நியூசிலாந்து கிரிக்டெ் அணி விளையாடிவருகிறது. இரு அணிகளும் மோதிக்கொள்ளும் முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் நடந்தது.

இந்தியா முதல் இன்னிங்ஸில் 345 ரன்கள் குவித்தது. அதிகப்பட்சமாக ஸ்ரேயாஷ் ஐயர் 105 ரன்களும், சுப்மன் கில் 52 ரன்களும் எடுத்திருந்தனர். நியூசிலாந்து தரப்பில் சௌதி 27.4 ஓவர்கள் வீசி 69 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

ஜேமிஸன் தன் தரப்புக்கு 23.2 ஓவர்கள் வீசி 3 விக்கெட்டுகள் எடுத்தார். இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடர்ந்த நியூசிலாந்து 296 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து வீரர்களான டாம் லாதம், வில் யஷ் ஆகியோர் முறையை 95 மற்றும் 89 ரன்கள் குவித்தனர்.

பின்னர், இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 234 ரன்கள் எடுத்தது. ஸ்ரேயாஷ் ஐயர் 65 ரன்னும், விருத்திமான் சஹா அவுட் ஆகாமல் 61 ரன்னும் எடுத்திருந்தார். நியூசிலாந்து அணிக்கு 284 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதையடுத்து 284 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங் செய்த நியூசிலாந்து 5ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்து போட்டியை டிரா செய்தது.

முதல் மற்றும் இரண்டாம் இன்னிங்ஸில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரேயாஷ் ஐயர் ஆட்ட நாயகனாக தேர்வானார்.

இதையும் படிங்க : Exclusive: 'நான் தென்னிந்திய குடும்பத்தைச் சேர்ந்தவன், வெற்றி ஒன்றே இலக்கு'- வெங்கடேஷ் ஐயர்

ABOUT THE AUTHOR

...view details