சென்னை: ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் 19ஆம் தேதி துபாயில் தொடங்கப்பட உள்ளது. அதற்கு முன்னதாக அணிகளுக்கு இடையில் வீரர்களை மாற்றிக் கொள்ளும் டிரேட் முறை நடைபெற்று வருகிறது. அதன்படி சில அணிகள் தங்களது வீரர்களை மாற்ற அணிகளுடன் மாற்றி வருகின்றன.
இதனைத் தொடர்ந்து அனைத்து அணிகளும் தங்கள் அணியில் தக்க வைத்து கொண்ட அல்லது விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை பிசிசியிடம் இன்று சமர்பிக்க வேண்டும். இந்த நிலையில், குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக செல்பட்டு வந்த ஹரிதிக் பாண்டியா, மீண்டும் அவரது பழைய அணியான மும்பை இந்தியன்ஸுக்கு செல்வதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இது குறித்தான செய்தி பல்வேறு வட்டாரங்களில் இருந்து கசிந்து வரும் நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி 15 கோடி கொடுத்து ஹர்திக் பாண்டியாவை வாங்க இருப்பாதாக கூறப்பட்டு வருகிறது. தற்போது இது குறித்து இந்திய அணியின் வீரரும், ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரருமான ரவிச்சந்திரன் அஸ்வின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறும்பொழுது, "ஹர்திக் பாண்டியா மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்புவது உண்மையாக இருந்தால், அது தங்கம் மாதிரியானது. இது முழுக்க முழுக்க பணம் கொடுத்து வாங்குவதாக இருக்கும்.