சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடி வரும் தோனி கிரிக்கெட் விளையாடாத தருணங்களில் விவசாயம் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் செய்து வருகிறார். இந்த நிலையில் ஐபிஎல் முடிந்த கையோடு தோனி பெங்களூரு செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.
கர்நாடக மாநிலம், பெங்களூருவில் சர்வதேச தரத்தில் பள்ளி ஒன்றைக் கட்டியிருக்கிறார், தோனி. நவீன வசதிகளுடன் இப்பள்ளி கட்டமைக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு கல்வி மட்டுமின்றி விளையாட்டு, திறன் மேம்பாடு தொடர்பான பயிற்சிகள் அளிக்கும் வசதிகளும் இப்பள்ளியில் இருப்பதாக கூறப்படுகிறது.