துபாய்: கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி தொடங்கிய ஆசியக் கோப்பை, செப்டம்பர் 17ஆம் தேதி முடிவடைந்தது. இந்த தொடரின் இறூதிப் போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்திய அணி இலங்கை அணியை 50 ரன்களுக்கு ஆல் ஆவுட் ஆக்கியது. அதன் பின் இந்திய அணி 6.1 ஓவர்களில் 51 ரன்கள் எடுத்து அசாதாரண வெற்றியைப் பெற்றது.
இந்த போட்டியில் ஆட்ட நாயகனாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் தேர்வானார். இவர் இலங்கைக்கு எதிரான இறுதிப் போட்டியில் 6 விக்கெட்டுகளைக் கப்பற்றி பல சாதனைகளை படைத்தார். இந்நிலையில், வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் 9வது இடத்திலிருந்து ஐசிசி தரவரிசையில் முதல் இடம் பெற்றுள்ளார்.
இதையும் படிங்க:ராமோஜி பிலிம் சிட்டியில் காட்சிப்படுத்தப்பட்ட ஐசிசி உலகக்கோப்பை!