தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

இந்திய கிரிக்கெட் அணிக்கு மனத்தத்துவ பயிற்சியாளராக பேடி உப்டான் நியமனம்!

இந்திய கிரிக்கெட் அணிக்கு மனத்தத்துவ பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த பேடி உப்டான் நியமிக்கப்பட்டுள்ளார்.

மனத்தத்துவ பயிற்சியாளராக பேடி உப்டான் நியமனம்
மனத்தத்துவ பயிற்சியாளராக பேடி உப்டான் நியமனம்

By

Published : Jul 27, 2022, 10:46 PM IST

இந்திய கிரிக்கெட் அணிக்கு மனத்தத்துவ பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த பேடி உப்டானை பிசிசிஐ நியமனம் செய்துள்ளது. இவர் ஏற்கெனவே 2008ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த கேரி கிரிஸ்டனுடன் , உதவியாளராக பணியாற்றியவர்.

இவர் இந்திய அணியில் இருந்த போது 2011ஆம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு இவர் தென் ஆப்பிரிக்கா அணியில் பணியாற்றினார். அப்போது 2013ஆம் ஆண்டில் தென் ஆப்பிரிக்கா நம்பர் 1 டெஸ்ட் டீம் என்ற பெருமையை பெற்றது.

அதற்கு முன்னதாக ஐபிஎல் போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் டிராவிட்டுடனும் , டெல்லி டேர்வில்ஸ் அணியுடன் பணியாற்றி இருக்கிறார். இந்தாண்டு இறுதியில் டி-20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் நிலையில் , இவரை பிசிசிஐ நியமித்து இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

53 வயதான பேடி உப்டான் , தற்போது வெஸ்ட் இண்டீஸில் விளையாடி வரும் இந்திய அணியுடன் இணைந்துள்ளார்.

இதையும் படிங்க: ஐசிசி ஒரு நாள் பேட்ஸ்மேன் தரவரிசையில் தவான், ஐயர் முன்னேற்றம்

ABOUT THE AUTHOR

...view details