தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

உலக கோப்பை டி20: சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த IND Vs PAK போட்டிக்கான டிக்கெட்டுகள் - இந்தியா பாகிஸ்தான் போட்டிகள்

ஆஸ்திரேலியாவில் நடக்கவிருக்கும் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட்டுக்கள் சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது.

Tickets for India v Pakistan match sold out
Tickets for India v Pakistan match sold out

By

Published : Sep 15, 2022, 4:58 PM IST

சிட்னி: உலக கோப்பை டி20 தொடர் அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்க தேசம், இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, நமீபியா, ஸ்காட்லாந்து, இலங்கை, மேற்கிந்திய தீவுகள், அயர்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், நெதர்லாந்து, ஜிம்பாப்வே என 16 நாடுகள் பங்கேற்கின்றன.

ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் சூப்பர் 12 சுற்றில் விளையாட உள்ளன. இந்த சூப்பர் 12 சுற்றில் இந்திய அணி தனது முதலாவது போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் மோதுகிறது. இந்த போட்டி அக்டோபர் 23ஆம் தேதி மெல்போர்ன் மைதானத்தில் நடக்கிறது.

ஆசிய டி20 கோப்பையில் பாகிஸ்தான் அணியுடன் இந்தியா தோல்வியடைந்தது. இதனால் வரவிருக்கும் உலக கோப்பை போட்டிக்கு பெரும் எதிர்ப்பார்ப்பு கிளம்பியுள்ளது. அந்த வகையில் இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட்டுகள் சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்துள்ளன. இதுகுறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், "உலக கோப்பை டி20 தொடர் போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை 5 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

இந்த தொடர் தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்கு மேல் உள்ள நிலையிலும், இந்த விற்பனை போட்டிகளை தவிர்க்க முடியாத நிகழ்வாக மாற்றிவிட்டது. குறிப்பாக அக்டோபர் 23ஆம் தேதி மெல்போர்ன் மைதானத்தில் நடக்கும் இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட்டுகள் சில நிமிடங்களில் விற்றுத்தீர்ந்துள்ளன எனத் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ்: 2ஆம் சுற்றில் இந்திய வீராங்கனை வெளியேற்றம்

ABOUT THE AUTHOR

...view details