ஐபிஎல் தொடரின் 21ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. அகமதாபாத் நகரில் அமைந்துள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், முதலில் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 123 ரன்களைச் சேர்த்தது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தரப்பில் பிரசித் கிருஷ்ணா மூன்று விக்கெட்டுகளையும், பாட் கம்மின்ஸ், சுனில் நரைன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
124 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்னும் எளிய இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு, ஆரம்பமே கதிகலங்கச் செய்தது. நட்சத்திர வீரர்களான சுப்மன் கில் 9 ரன்களிலும், நித்திஷ் ராணா, நரைன் டக் அவுட்டாகி நடையைக் கட்டினர்.