சிட்டகாங்: இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடிவருகிறது. முதல் 2 போட்டிகளில் வங்கதேச அணி வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது. இந்த நிலையில், இன்று (டிசம்பர் 10) சிட்டகாங்கில் உள்ள மைதானத்தில் 3ஆவது ஒருநாள் போட்டி நடந்துவருகிறது. முதலில் டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய இந்திய வீரர்கள் 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 409 ரன்களை குவித்தனர்.
IND vs BAN: வங்கதேசத்துக்கு 410 ரன்கள் இலக்கு - இந்தியா வங்சதேசம் கிரிக்கெட் போட்டி
இந்தியா-வங்சதேச கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 3ஆவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 409 ரன்களை எடுத்துள்ளது.
அதிகபட்சமாக, இஷான் கிஷன் 131 பந்துகளுக்கு 210 ரன்களை குவித்தார். அதேபோல, விராட் கோலி 91 பந்துகளுக்கு 113 ரன்களையும், வாஷிங்டன் சுந்தர் 27 பந்துகளுக்கு 37 ரன்களையும் எடுத்தனர். மறுப்புறம் வங்கதேசத்தின் பந்துவீச்சாளர்கள் தஸ்கின் அகமது, எபடோட் ஹொசைன், ஷகிப் அல் ஹசன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். அந்த வகையில், 410 ரன்கள் வெற்றி இலக்குடன் வங்கதேச வீரர்கள் களமிறங்கியுள்ளனர்.
இதையும் படிங்க:IND vs BAN: இரட்டை சதமடித்த இஷான் கிஷன்... புதிய சாதனை படைத்த விராட் கோலி...