தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

கரோனாவிலிருந்து மீண்ட இந்திய கிரிக்கெட் வீரர்கள்!

ஐபிஎல் தொடரின்போது கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சாஹா, அமித் மிஸ்ரா, பிரசித் கிருஷ்ணா ஆகியோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

பிரசித் கிருஷ்ணா, அமித் மிஸ்ரா, விருத்திமான் சாஹா
கரோனாவிலிருந்து மீண்ட இந்திய கிரிக்கெட் வீரர்கள்

By

Published : May 20, 2021, 4:46 PM IST

டெல்லி: 14ஆவது ஐபிஎல் தொடர் கரோனா பரவல் காரணமாக காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டது. தொடர் நிறுத்தப்பட்ட மே 4ஆம் தேதி அன்று சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை சேர்ந்த விருத்திமான் சாஹா, டெல்லி கேப்பிடல்ஸ் அணியைச் சேர்ந்த அமித் மிஸ்ரா இருவருக்கும் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.

இதையடுத்து, மே 8ஆம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் இளம் பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணாவும் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டார்.

இந்நிலையில் மூவரும் கரோனாவிலிருந்து மீண்டுவிட்ட நிலையில், தற்போது அவர்கள் வீடு திரும்பியுள்ளனர். இதில், அமித் மிஸ்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் மருத்துவர்களுடனும், செவிலியருடனும் அவர் எடுத்த புகைப்படத்தைப் பதிவிட்டு, முன்களப் பணியாளர்களுக்கு தனது தாழ்மையான நன்றியைத் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் இடம்பிடித்திருக்கும் சாஹா, பிரசித் கிருஷ்ணா ஆகிய இருவரும் கரோனாவிலிருந்து குணமடைந்துவிட்டதால், அவர்கள் உடல் தகுதியை நிரூபிக்கும்பட்சத்தில் இந்திய அணியுடன் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மும்பையில் இந்திய அணி வீரர்கள் நேற்று (மே 19) முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதன்பின், வரும் ஜுன் 2ஆம் தேதி இந்திய அணி இங்கிலாந்து புறப்படவுள்ளது. அங்கு நியூசிலாந்து அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரையும் இந்திய அணி விளையாட இருக்கிறது.

இதையும் படிங்க: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் இந்திய அணி: இந்த படை போதுமா?

ABOUT THE AUTHOR

...view details