தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஐபிஎல் 2022: பஞ்சாபை வீழ்த்திய கொல்கத்தா அபார வெற்றி - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ்

ஐபிஎல் 2022ஆம் தொடரின் 8ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பஞ்சாப் கிங்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

tata-ipl-2022-match-8-kkr-vs-pbks-score-highlights
tata-ipl-2022-match-8-kkr-vs-pbks-score-highlights

By

Published : Apr 2, 2022, 12:08 PM IST

மகாராஷ்டிராவில் ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் நடந்து வருகிறது. மொத்தம் உள்ள 70 லீக் ஆட்டங்களில் 8 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளன. நேற்று (ஏப்ரல் 1) 8ஆவது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடந்தது.

இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலபரீட்சை நடத்தின. முதலில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய பஞ்சாப் அணி வீரர்கள் 18.2 ஓவர்களில் 137 ரன்களை மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் பறிகொடுத்தனர்.

அதிகபட்சமாக பானுகா ராஜபக்சே 9 பந்துகளுக்கு 31 ரன்களையும், ககிசோ ரபாடா 16 பந்துகளுக்கு 25 ரன்கள் எடுத்தனர். மறுப்புறம் கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

கொல்கத்தா அணிக்கு 138 ரன்கள் இலக்கு: இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா வீரர்கள் ஆரம்பத்தில் தடுமாறினர். ரஹானே 11 பந்துகளில் 12 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அவருடன் களமிறங்கிய வெங்கடேஷ் ஐயரும் 3 ரன்களிலேயே விக்கெட்டை இழந்தார். கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 15 பந்துகளுக்கு 26 ரன்களை எடுத்தார்.

இதையடுத்து களமிறங்கிய ஆண்ட்ரே ரசல் அதிரடியாக ஆடி 31 பந்துகளில் 71 ரன்களை குவித்து அணிக்கு வலுசேர்த்தார். அப்படி கொல்கத்தா அணி 14.3 ஓவர்கள் முடிவிலேயே 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 141 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பஞ்சாப் பந்துவீச்சாளர் ராகுல் சாஹர் 2 விக்கெட்டுகளை எடுத்தார்.

இதையும் படிங்க:CSK vs LSG: சென்னையின் 2ஆவது தோல்வி... ஐபிஎல் வரலாற்றிலேயே கிடையாதாம்...

ABOUT THE AUTHOR

...view details