மகாராஷ்டிராவில் ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் நடந்து வருகிறது. இந்தத் தொடரின் 7ஆவது லீக் ஆட்டம் மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நேற்றிரவு 7.30 மணிக்கு நடந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்-லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் பலபரீட்சை நடத்தின.
இரு அணிகளும் தனது முதலாவது ஆட்டத்தில் தோல்வியை தழுவியதால், இந்த ஆட்டத்தில் முதல் வெற்றியை பதிவு செய்யப்போவது சென்னையா, லக்னோவா என்னும் எதிர்ப்பார்ப்பு கிளம்பியது.
முதலில் டாஸ் வென்ற டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி சென்னை வீரர்கள் களமிறங்கினர். தொடக்க ஆட்டக்காரரான ருதுராஜ் கெய்க்வாட் 1 ரன்னில் விக்கெட்டை இழந்து அதிச்சியளித்தார்.
மறுப்புறம் ராபின் உத்தப்பா நிதானமாக ஆடி 27 பந்துகளுக்கு 50 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து மொயீன் அலி 22 பந்துகளுக்கு 35 ரன்களும், ஷிவம் துபே 30 பந்துகளுக்கு 49 ரன்களையும் எடுத்து அணிக்கு வலுசேர்ந்தனர். அப்படி 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்களை குவித்தது.
கேஎல் ராகுல், குயின்டன் டி காக் அசத்தல்: லக்னோ பந்துவீச்சாளர்கள் ரவி பிஷ்னோய், அவேஷ் கான். ஆண்ட்ரூ டை தலா இரண்டு விக்கெட்டுகளை எடுத்து அசத்தினர். அதன்படி 211 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு லக்னோ வீரர்கள் களமிறங்கினர்.
ஆரம்பம் முதலே கேப்டன் கேஎல் ராகுல், குயின்டன் டி காக் இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அப்படி ராகுல் 26 பந்துகளுக்கு 40 ரன்களையும், டி காக் 45 பந்துகளுக்கு 61 ரன்களையும் குவித்தனர். அதேபோல எவின் லூயிஸ் 23 பந்துகளுக்கு 55 ரன்களை குவித்து வெற்றியை நோக்கி அணியை கொண்டுசென்றார்.
இறுதியாக 19.3 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் 211 ரன்கள் எடுத்து சென்னை அணியை வீழ்த்தியது. சென்னை அணி சார்பில் டுவைன் பிரிட்டோரியஸ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இரண்டாவது போட்டியிலும் சென்னை தோல்வியை தழுவியதால் அணி ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். ஐபிஎல் வரலாற்றிலேயே சென்னை அணி முதல் இரண்டு ஆட்டங்களில் தோற்றது இதுவே முதல்முறை.
இதையும் படிங்க:ஐபில் இன்றைய போட்டி; CSK vs LSG - லக்னோவிற்கு லாபமா?