தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

SRH vs LSG: லக்னோ அணிக்கு 122 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்த சன்ரைசர்ஸ்!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் லக்னோ அணிக்கு 122 ரன்களை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

ipl match
ஐபிஎல் கிரிக்கெட்

By

Published : Apr 7, 2023, 9:20 PM IST

லக்னோ: 16 ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 10 ஆவது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி அன்மோல்ப்ரீத் சிங் மற்றும் மயங்க் அகர்வால் ஆட்டத்தை தொடங்கினர்.

8 ரன்கள் எடுத்திருந்த போது மயங்க் அகர்வால் குருணல் பாண்ட்யா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் அன்மோல்ப்ரீத்துடன், ராகுல் திரிபாதி ஜோடி சேர்ந்தார். இந்நிலையில் குருணல் பாண்ட்யா பந்துவீச்சில் அன்மோல் 31 ரன்களில் ஆட்டமிழந்தார். ராகுல் திரிபாதி 34 ரன்களில் நடையை கட்டினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் மார்க்ரம் ரன் எதுவும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார்.

ஹேரி புரூக் 3, வாஷிங்டன் சுந்தர் 16, அடில் ரஷித் 4, உம்ரான் மாலிக் 0 என ஆட்டமிழந்தனர். 20 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்தது. அப்துல் சமத் 21 ரன்களுடனும், புவனேஸ்வர் குமார் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

பந்துவீச்சை பொறுத்தவரை லக்னோ அணியில் அதிகபட்சமாக குருணல் பாண்ட்யா 3 விக்கெட்களை எடுத்தார். அமித் மிஸ்ரா 2, யாஷ் தாகூர், ரவி பீஷ்னோய் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 122 ரன்கள் வெற்றி இலக்குடன், லக்னோ அணி ஆட்டத்தை தொடங்கியது.

ABOUT THE AUTHOR

...view details