தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

IPL 2021 CSK vs RR: தொடரில் 2ஆவது வெற்றியைப் பெறப்போவது யார்? - சிஎஸ்கே

சென்னை அணியில் தீபக் சஹார், சர்துல் தாக்கூர் - ராஜஸ்தான் அணியில் உனத்கட், சக்காரியா என இன்றையப் போட்டியில் வேகப்பந்துவீச்சாளர்களின் மீது கூடுதல் வெளிச்சம் படர்ந்திருக்கும். வரப்போகும் டி20 உலகக்கோப்பையில் இந்தியாவிற்கான வேகப்புயல்களை அடையாளம் காட்டும் போட்டியாகக்கூட இன்றையப் போட்டி அமையலாம்.

MS DHONI, தோனி, SANJU SAMSON, சென்னை சூப்பர் கிங்ஸ்,  சஞ்சு சாம்சன்,ராஜஸ்தான் ராயல்ஸ்,RR, CSK, ஆர்ஆர், சிஎஸ்கே
Match Preview: RR up against rejuvenated CSK

By

Published : Apr 19, 2021, 6:16 PM IST

மும்பை:14ஆவது இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடர் ஏப்ரல் 9ஆம் தேதி சென்னையில் தொடங்கி, ரசிகர்களின்றி மும்பை, சென்னை ஆகிய இடங்களில் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.

இந்த ஐபிஎல் தொடரின் 12ஆவது லீக் போட்டியில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. மும்பை வான்கடேவில் நடைபெறும் இப்போட்டி இன்று (ஏப். 19) இரவு 7.30 மணிக்குத் தொடங்குகிறது.

சென்னை, ராஜஸ்தான் இரு அணிகளும், முதல் போட்டியில் தோல்வியையும், இரண்டாவது போட்டியில் வெற்றியையும் பெற்று புள்ளிப்பட்டியலில் முறையே நான்காம், ஐந்தாம் இடங்களில் உள்ளன.

சிஎஸ்கேவில் பலவீனமாக இருந்த பந்துவீச்சு, கடந்த போட்டியில் தீபக் சஹாரின் எழுச்சியால் சற்று நிமிர்ந்துள்ளது. தாக்கூர், சாம் கரன், பிராவோ ஆகியோர் இன்றும் சிறப்பாகச் செயல்படும்பட்சத்தில் ராஜஸ்தான் நடுவரிசை பேட்டர்களுக்கு அவர்கள் அழுத்தத்தைக் கொடுக்க வாய்ப்புள்ளது.

மொயின் அலியின் பொறுப்பான ஆட்டம் சென்னை அணியை மேலும் பலம் பெறச் செய்துள்ளது. ரெய்னா, ராயுடு, தோனி ஆகியோர் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

இன்றும் பெரும் பிரச்சினையாக இருப்பது, சிஎஸ்கேவின் தொடக்க பேட்டிங்தான். ருத்ராஜ், டூ பிளெசிஸ் சரியான தொடக்கத்தை அமைத்தால் பின்வரிசை பேட்டர்களுக்கான சுமை குறையலாம். மேலும், உத்தப்பா (அ) மொயின் அலி ஆகியோரை தொடக்க வீரர்களாகக் களமிறக்கி சிஎஸ்கே பரிசோதித்துப் பார்க்கலாம்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைப் பொறுத்தவரை பேட்டிங் வரிசைதான் கவலைக்கிடமாக இருக்கிறது. முதல் போட்டியில் சாம்சன், இரண்டாம் போட்டியில் மில்லர் என ஒற்றை ஆளாகப் போராட வேண்டிய நிலையில் ராஜஸ்தான் பேட்டர்கள் உள்ளனர். நடுவரிசை வீரர்கள் நிலையாக நின்று ஆடினால் ராஜஸ்தான் பெரிய இலக்கைக்கூட எளிதாகக் கடக்கும் அளவிற்குப் பலமாக உள்ளது.

மனன் வோரா, ரியான் பராக், சிவம் தூபே போன்ற உள்ளூர் வீரர்கள் தங்களது முழுத்திறனையும் வெளிக்காட்டியாக வேண்டும். யஷஸ்வி ஜெய்ஸ்வால், அனுஜ் ராவத் ஆகிய இளம் வீரர்களைப் பயன்படுத்தவும் அணி நிர்வாகம் இன்றையப் போட்டியில் முயற்சிக்கும்.

சென்னை அணியில் தீபக் சஹார், சர்துல் தாக்கூர், ராஜஸ்தான் அணியில் உனத்கட், சக்காரியா என இன்றையப் போட்டியில் வேகப்பந்துவீச்சாளர்களின் மீது கூடுதல் வெளிச்சம் படர்ந்திருக்கும். வரப்போகும் டி20 உலகக்கோப்பையில் இந்தியாவிற்கான வேகப்புயல்களை அடையாளம் காட்டும் போட்டியாகக்கூட இன்றையப் போட்டி அமையலாம்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் அணியும் இதுவரை 23 போட்டிகளில் மோதியுள்ளன. இவற்றில் சிஎஸ்கே 14 போட்டிகளிலும், ஆர்ஆர் 9 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளன.

இதையும் படிங்க: முத்தையா முரளிதரன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி!

ABOUT THE AUTHOR

...view details