15வது ஐபிஎல் தொடரில் லீக் ஆட்டங்கள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. நேற்று நவி மும்பை டி.ஒய் பாட்டில் மைதானத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, கே எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின.
அதிரடி காட்டிய தொடக்க ஜோடி:போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக கேப்டன் கே எல் ராகுல் - குவின்டன் டி காக் களமிறங்கினர். இருவரும் கொல்கத்தா அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்து பவுண்டரிகளும் , சிக்ஸர்களும் விளாசினர். அபாரமாக ஆடிய டி காக் சதம் விளாசினார்.
இறுதியில் லக்னோ அணி விக்கெட் இழப்பின்றி 210 ரன்கள் குவித்தது. டி காக் 70 பந்துகளில் 140 ரன்களும், ராகுல் 51 பந்துகளில் 68 ரன்கள் அடித்தனர். 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி கொல்கத்தா அணி களமிறங்கியது. தொடக்கம் சரியாக அமையாத போதிலும் அதன் பிறகு வந்த வீரர்கள் பொறுப்பாக ஆடியதால் ஆட்டம் சூடு பிடித்தது.