தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

DC Vs KKR: ஆல் ஆவுட் கொல்கத்தா.. முதல் வெற்றியைப் பதிவு செய்யுமா டெல்லி? - KKR

ஐபிஎல் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் டெல்லி அணிக்கு 128 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது, கொல்கத்தா அணி.

DC Vs KKR: ஆல் ஆவுட் கொல்கத்தா.. டெல்லி அணிக்கு 128 ரன்கள் இலக்கு
DC Vs KKR: ஆல் ஆவுட் கொல்கத்தா.. டெல்லி அணிக்கு 128 ரன்கள் இலக்கு

By

Published : Apr 20, 2023, 10:58 PM IST

டெல்லி:கடந்த மார்ச் 31அன்று தொடங்கிய ஐபிஎல் 2023 போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், போட்டியின் 28வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இன்றைய ஆட்டத்தின்போது மழை பெய்ததால், இரவு 8.15 மணிக்கு டாஸ் போடப்பட்டது. டாஸ் வென்ற டெல்லி அணி, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதனால் 8.30 மணியளவில் பேட்டிங்கில் விளையாடிய கொல்கத்தா அணி, 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 127 ரன்களை எடுத்துள்ளது. இதில் அதிகபட்சமாக ஜாசன் ராய் 43 ரன்களில் ஆட்டம் இழந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். மேலும், ஆண்ட்ரே ரசல் 38 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். அதேநேரம், டெல்லி அணியின் இஷாந்த் ஷர்மா, அன்ரிச் நோர்ஜே, அக்ஸர் படேல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகிய வீரர்கள் தலா 2 விக்கெட்டுகளையும், முகேஷ் குமார் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இதனைத்தொடர்ந்து 128 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் விளையாடி வரும் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 2 ஓவர்கள் முடிவில் 19 ரன்கள் எடுத்துள்ளது. டேவிட் வார்னர் மற்றும் பிரித்வி ஷா ஆகியோர் முதலில் விளையாடி வருகின்றனர்.

இன்றைய ஆட்டத்தில் டேவிட் வார்னரை கேப்டனாகக் கொண்டு களம் கண்ட டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பிளேயிங் 11இல், பில் சால்ட் (விக்கெட் கீப்பர்), மிட்சல் மார்ஷ், மனீஷ் பாண்டே, லலித் யாதவ், அமன் கான், அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், அன்ரிச் நோர்ஜே, இஷாந்த் ஷர்மா மற்றும் முகேஷ் குமார் ஆகியோர் விளையாடினர்.

அதேபோல் நிதிஷ் ராணாவை கேப்டனாகக் கொண்டு விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பிளேயிங் 11இல், லிடன் தாஸ் (விக்கெட் கீப்பர்), வெங்கடேஷ் ஐயர், ஜாசன் ராய், சுனீல் நரைன், ஆண்டிரே ரசல், ரிங்கு சிங், மந்தீப் சிங், குல்வாந்த் கெஜ்ரோலியா, உமேஷ் யாதவ் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் களம் கண்டனர்.

மேலும், இதுவரையிலான லீக் ஆட்டத்தில் 5 போட்டிகளில் விளையாடி ஐந்திலும் தோல்வி அடைந்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி புள்ளிகள் ஏதும் பெறாமல் கடைசி இடத்திலும், 2 வெற்றி 3 தோல்வி என 5 போட்டிகளில் விளையாடிய கொல்கத்தா அணி 4 புள்ளிகள் உடன் 8வது இடத்திலும் புள்ளிப் பட்டியலில் உள்ளது.

இதையும் படிங்க:RCB vs PBKS: சிராஜ் வேகத்தில் வீழ்ந்த பஞ்சாப்: 24 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு வெற்றி!

ABOUT THE AUTHOR

...view details