பெங்களூரு:ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 24வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் டு பிளெஸ்ஸி, சென்னை அணியை பேட்டிங் செய்ய பணித்தார். அதன்படி சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கெய்க்வாட், கான்வே களம் இறங்கினர். கெய்வாட் 3 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார்.
பின்னர் கான்வேவுடன், ரகானே ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடியாக விளையாடி ரன் சேர்த்தனர். 37 ரன்கள் எடுத்திருந்த போது ரகானே ஆட்டமிழந்தார். அதிரடியை தொடர்ந்த கான்வே 45 பந்துகளில் 83 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். இதில் 6 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் அடங்கும். இதேபோல் ஷிவம் துவேவும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 27 பந்துகளில் 52 ரன்களை (2 பவுண்டரி, 5 சிக்ஸர்) குவித்து அவர் ஆட்டமிழந்தார்.