மும்பை:ஐபிஎல் தொடரின் 40ஆவது லீக் ஆட்டம் வான்கடே மைதானத்தில் இன்றிரவு 7:30 மணிக்கு நடக்கிறது. இதில், குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. ஐபிஎல் புள்ளிப்பட்டியலில், குஜராத் அணி 7 போட்டிகளில் 6 வெற்றி ஒரு தோல்வி என்ற கணக்கில் 2ஆவது இடத்தில் உள்ளது.
மறுப்புறம் ஹைதராபாத் அணி 7 போட்டிகளில் 5 வெற்றி 2 தோல்வி என்ற கணக்கில் 3ஆவது இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் குஜராத் வென்றால் முதலிடத்தை பிடிக்கும், அதோபோல ஹைதராபாத் அணி வென்றால் 2ஆம் இடத்தை பிடிக்கும். முன்னதாக தொடரின் 21ஆவது லீக் போட்டியில் இரு அணிகளும் மோதின. இதில், ஹைதராபாத் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இரு அணிகளின் உத்தேச பட்டியல்