ஐபிஎல் தொடரின் 11ஆவது லீக் போட்டி பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் இடையே மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.
இதில், டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கே.எல். ராகுல், மயங்க் அகர்வால் ஆகிய ஒருவரும் அரை சதம் அடித்தனர்.
36 பந்துகளில் 69 ரண்கள் எடுத்து அதிரடியாக ஆடிவந்த மயங்க் அகர்வால் லுக்மன் மெரிவாலா பந்து வீச்சிள் கேட்ச் ஆனார். தொடர்ந்து, ராகுலும் 51 பந்துகளில் 61 ரண்கள் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார்.
இதன் பிறகு களம் இறங்கிய முக்கிய ஆட்டக்காரர்களான கிறிஸ் கெயில், நிகோலஸ், தீபக் ஹூடா ஆகியோர் அதிகளவில் ரண்கள் சேர்க்காததால், ஆட்டத்தின் முடிவில் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 195 ரண்களை பஞ்சாப் அணி எடுத்திருந்தது.
இதையடுத்து, 196 ரண்களை இழக்காக கொண்டு களம் இறங்கிய டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பிரித்வி ஷா, ஷிகர் தவான் ஆகிய இருவரும் அதிரடியான ஆட்டத்தை தொடங்கினர்.
நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரித்வி ஷா 32 ரண்களில் அவுட் ஆனார். இதன் பிறகு களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித் நிதானமாக ஆடி வந்த நிலையில் நிதானமாக அவுட் ஆகி வெளியேறினார்.
இருந்தபோதிலும், இன்று நட்சத்திர நாயனாக திகழ்ந்த தவான், பஞ்சப் அணியின் பவுலர்கள் வீசிய பந்துகளை பவுண்டரி, சிக்ஸர் என விலாசி வானவெடிக்கை காட்டிக்கொண்டிருந்தார்.
அதிரடியாக ஆடி 92 ரண்கள் எடுத்திருந்த நிலையில், வித்யாசமான ஷாட் அடிக்க ட்ரை பன்னபோது போல்ட் ஆனார். இதையடுத்து, மார்கஸ் ஸ்டோனின் நிதானமான ஆட்டத்தால் டெல்லி அணி வெற்றி இழக்கை நெருங்கியது.
இருதியில், 12 பந்துகளில் 9 ரண்கள் எடுக்கவேண்டிய சூழலில் பேடிங்க் செய்த லலித் யாதவ், நோ பாலில் ஒரு பவுண்டரி அடித்து டெல்லி அணிக்கு நம்பிக்கையை கொடுத்தார். அடுத்த பந்தில் ஒரு ரண் எடுத்து மறுபுறமிருந்த மார்கஸ்-க்கு ஸ்ட்ரைக் கொடுத்தார்.
பின்னர், ஒரு பவுண்டரியை விலாசிய மார்கஸ் ஆட்டத்தை முடித்து வைத்தார். இதனால், டெல்லி அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஐபிஎல் புள்ளி விவரப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
இதையும் படிங்க: IPL 2021 RCB vs KKR: அட்டகாசமான பந்துவீச்சால் பெங்களூரு ஹாட்ரிக் வெற்றி!