மும்பை:16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 22வது லீக் ஆட்டத்தில் மும்பை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. இப்போட்டியில் மும்பை அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், கொல்கத்தா அணியை பேட்டிங் செய்ய பணித்தார்.
அந்த வகையில் கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக குர்பாஸ், ஜெகதீசன் களம் இறங்கினர். குர்பாஸ் 8 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், ஜெகதீசன் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். பின்னர் வெங்கடேஷ் ஐயர், கேப்டன் நிதிஷ் ராணா ஜோடி சேர்ந்தனர். எனினும் ராணா 5 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். ஒருபுறம் விக்கெட்கள் வீழ்ந்தாலும், மறுமுனையில் அதிரடியாக விளையாடினார் வெங்கடேஷ் ஐயர். மும்பை அணியின் பந்துவீச்சை நான்கு புறமும் சிதறடித்த அவர் சதம் விளாசி அசத்தினார். 51 பந்துகளில் 104 ரன்கள் (6 பவுண்டரி, 9 சிக்ஸர்கள்) எடுத்த அவர், ஜான்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.