ஹைதராபாத்:ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 58வது லீக் ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் மார்க்ரம், பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக அன்மோல்ப்ரீத் சிங், அபிஷேக் சர்மா களம் இறங்கினர்.
SRH vs LSG: லக்னோ அணிக்கு 183 ரன்கள் இலக்கு! - லக்னோ ஹைதராபாத் மோதல்
ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில், 183 ரன்களை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
அன்மோல்ப்ரீத் 36, அபிஷேக் 7 ரன்களில் வெளியேறினர். ராகுல் திரிபாதி 20, கேப்டன் மார்க்ரம் 28 ரன்களில் ஆட்டமிழந்தனர். அதிரடியாக விளையாடிய கிளாசென் 47 ரன்களுக்கு அவுட்டானார். பிலிப்ஸ் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.
20 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 6 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது. அப்துல் சமத் 37, புவனேஸ்வர் குமார் 2 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். லக்னோ அணியில் பந்துவீச்சை பொறுத்தவரை க்ருணல் பாண்ட்யா 2 விக்கெட்களை வீழ்த்தினார். யுத்விர் சிங், ஆவேஷ் கான், யஷ் தாகூர், அமித் மிஸ்ரா தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.