மும்பை:ஐபிஎல் தொடரின் 54ஆவது லீக் ஆட்டம் வான்கடே மைதானத்தில் நடந்தது. இதில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பலப்பரீட்சை நடத்தின. முதலில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய பெங்களூரு அணி வீரர்கள் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்களை குவித்தனர். அந்த வகையில், 193 ரன்கள் வெற்றி இலக்குடன் ஹைதராபாத் அணி வீரர்கள் களமிறங்கினர். ஆனால், தொடக்கமே மோசமாக அமைந்தது.
அபிஷேக் சர்மா, கேப்டன் கேன் வில்லியம்சன் ரன்கள் ஏதுமின்றி முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்தனர். இதையடுத்து களமிறங்கிய ராகுல் திரிபாதி நிதானமாக ஆடி 37 பந்துகளுக்கு 58 ரன்களுடன் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து மார்க்ரம் 27 பந்துகளுக்கு 21 ரன்களையும், நிக்கோலஸ் பூரன் 14 பந்துகளுக்கு 19 ரன்களையும் எடுத்தனர். பூரன் விக்கெட்டுக்கு பிறகு அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்ந்தன.
அதன்படி 19.2 ஆவது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் ஹைதராபாத் அணி பறிகொடுத்து, தோல்வியுற்றது. பெங்களூரு அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. குறிப்பாக, பெங்களூரு பந்துவீச்சாளர் வனிந்து ஹசரங்கா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்டார்.
இதையும் படிங்க:CSK vs DC: டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சு