மும்பை: ஐபிஎல் போட்டியின் 51ஆவது லீக் ஆட்டம் பிராபோர்ன் மைதானத்தில் நடந்துவருகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன. முதலில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி மும்பை அணி வீரர்கள் களமிறங்கி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 177 ரன்களை எடுத்தனர். அதிகபட்சமாக இஷான் கிஷன் 29 பந்துகளுக்கு 45 ரன்களை குவித்தார். அவருடன் களமிறங்கிய கேப்டன் ரோஹித் சர்மா 28 பந்துகளுக்கு 43 ரன்களை குவித்தார். அதோபோல டிம் டேவிட் 21 பந்துகளுக்கு 44 ரன்களை குவித்து அணிக்கு வலுசேர்த்தார்.