மும்பை:ஐபிஎல் தொடரின் 56ஆவது லீக் ஆட்டம் இன்றிரவு (மே 9) 7:30 மணிக்கு டிஒய் பாட்டீல் மைதானத்தில் நடக்கிறது. இதில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் மும்பை அணி 10 போட்டிகளில், 2 வெற்றிகள் 8 தோல்விகள் என்ற கணக்கில் 4 புள்ளிகளுடன் 10ஆவது இடத்தில் உள்ளது. மறுப்புறம் கொல்கத்தா அணி 11 போட்டிகளில், 4 வெற்றிகள் 7 தோல்விகள் என்ற கணக்கில் 8 புள்ளிகளுடன் 9ஆவது இடத்தில் உள்ளது.
கொல்கத்தா அணி மீதமுள்ள 3 போட்டிகளில் வென்றால் பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைய வாய்ப்புள்ளது. இந்த வாய்ப்பும், முதல் நான்கு இடத்தில் உள்ள அணிகள் அடுத்துள்ள 3 போட்டிகளிலும் தொடர்ந்து தோல்வியடைந்தால் மட்டுமே சாத்தியம். மும்பை அணியை பொறுத்தவரை மீதமுள்ள 4 போட்டிகளில் வெற்றாலும் 12 புள்ளிகள் மட்டுமே கிடைக்கும். இது பிளே ஆஃப் சுற்றுக்கு போதுமானதல்ல. இரு அணிகளின் உத்தேசப்பட்டியல் பின்வருமாறு.