மும்பை:ஐபிஎல் தொடரின் 55ஆவது லீக் ஆட்டம் டிஒய் பாட்டீல் மைதானத்தில் இன்றிரவு (மே 8) 7:30 மணிக்கு நடக்கிறது. இதில், ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் சென்னை அணி 10 போட்டிகளில் 3 வெற்றிகள் 7 தோல்விகள் என்ற கணக்கில் 6 புள்ளிகளுடன் 9ஆவது இடத்தில் உள்ளது.
மறுப்புறம் டெல்லி அணி 10 போட்டிகளில் 5 வெற்றிகள் 5 தோல்விகள் என்ற கணக்கில் 10 புள்ளிகளுடன் 5ஆவது இடத்தில் உள்ளது. சென்னை அணி பிளே ஆஃப் நுழைவதற்கு மீதமுள்ள 4 போட்டிகளிலும் வெல்ல வேண்டும். இந்த வாய்ப்பும், முதல் நான்கு இடத்தில் இருக்கும் அணிகள் அதுள்ள 3 போட்டிகளி இரண்டில் தோன்றால் மட்டுமே கிடைக்கும். டெல்லி அணி இன்னும் 3 போட்டிகளில் வென்றால் பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழையலாம்.