மும்பை:ஐபிஎல் தொடரின் 54ஆவது லீக் ஆட்டம் வான்கடே மைதானத்தில் பிற்பகல் (மே 8) 3:30 மணிக்கு நடக்கிறது. இதில், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ஃபாஃப் டு பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் ஹைதராபாத் அணி 10 போட்டிகளில் 5 வெற்றிகள் 5 தோல்விகள் என்ற கணக்கில் 10 புள்ளிகளுடன் 6ஆவது இடத்தில் உள்ளது. மறுப்புறம் பெங்களூரு அணி 11 போட்டிகளில் 6 வெற்றிகள் 5 தோல்விகள் என்ற கணக்கில் 12 புள்ளிகளுடன் 4ஆவது இடத்தில் உள்ளது.
பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைய பெங்களூரு மீதமுள்ள நான்கு போட்டிகள் இரண்டில் வெற்றிபெற்றால் போதும். ஆனால், ஹைதராபாத் அணி மீதமுள்ள 5 போட்டிகளில் நான்கில் வென்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைய முடியும். இரு அணி வீரர்கள் உத்தேசப்பட்டியல் பின்வருமாறு.