மும்பை:ஐபிஎல் தொடரின் 50ஆவது லீக் ஆட்டம் இன்றிரவு (மே 5) 7:30 மணிக்கு பிராபோர்ன் மைதானத்தில் நடக்கிறது. இதில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன.
ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் டெல்லி அணி 9 போட்டிகளில் 4 வெற்றிகள் 5 தோல்விகள் என்ற கணக்கில் 7ஆவது இடத்தில் உள்ளது. மறுப்புறம் ஹைதராபாத் அணி 9 போட்டிகளில் 5 வெற்றிகள், 4 தோல்விகள் என்ற கணக்கில் 5ஆவது இடத்தில் உள்ளது.
பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைய டெல்லிக்கு 6 புள்ளிகளும், ஹைதராபாத்துக்கு 8 புள்ளிகளும் தேவை. இரு அணிகளும் 5 போட்டிகள் மீதமுள்ளன. இந்த சீசனில் முதல்முறையாக இரு அணிகளும் மோதுகின்றன. இரு அணிகளின் உத்தேசப்பட்டியல் பின்வருமாறு.