தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

LSG vs KKR: பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை நெருங்கிய லக்னோ அணி - கேகேஆர் படுதோல்வி

கொல்கத்தா அணிக்கு எதிரான லீக் போட்டியில் லக்னோ, 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ஏறக்குறைய பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை உறுதிசெய்துள்ளது.

லக்னோ அணி
லக்னோ அணி

By

Published : May 8, 2022, 7:33 AM IST

புனே:ஐபிஎல் தொடரில் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 8வது வெற்றியை பதிவு செய்து, புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நேற்று (மே 7) நடைபெற்ற ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.

போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, லக்னோ வீரர்கள் களமிறங்கி பேட்டிங் செய்தனர். 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 7 விக்கெட்கள் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக டி காக் அரைசதம் அடித்தார். கொல்கத்தா தரப்பில் ரஸ்ஸல் 2 விக்கெட்டுகளையும், சௌதி, மாவி, நரைன் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இதையடுத்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா வீரர்கள் களமிறங்கினர். ஆனால், கொல்கத்தா அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. ஓப்பனிங் பேட்டர் பாபா இந்திரஜித் ரன் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். தொடர்ந்து லக்னோ வீரர்களின் சிறப்பான பந்துவீச்சால் கொல்கத்தா வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ரஸ்ஸலின் ஆட்டம் கொல்கத்தா ரசிகர்களுக்கு சிறிது நம்பிக்கை அளிக்கும் வகையில் இருந்தது.

ஆனால் அவர் ஆவேஷ் கான் பந்துவீச்சில் அவுட் ஆனதும் , கொல்கத்தா 101 ரன்களில் சுருண்டு, 75 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலம் 8ஆவது வெற்றியை பெற்ற லக்னோ அணி ஏறக்குறைய பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆவேஷ் கான் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இதையும் படிங்க: கரோனாவால் ஆசிய விளையாட்டுகள் ஒத்திவைப்பு!

ABOUT THE AUTHOR

...view details