தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஐபிஎல் 2022: குஜராத் அணி அபார வெற்றி

ஐபிஎல் தொடரின் 43ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தியது.

By

Published : Apr 30, 2022, 7:47 PM IST

மும்பை:ஐபிஎல் தொடரின் 43ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. முதலில் டாஸ் வெற்ற பெங்களூரு அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி களமிறங்கிய, பெங்களூரு அணி வீரர்கள் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 170 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக விராட் கோலி 53 பந்துகளுக்கு 58 ரன்களை குவித்தார்.

அதோபோல ரஜத் படிதார் 32 பந்துகளுக்கு 52 ரன்களையும், மேக்ஸ்வெல் 18 பந்துகளுக்கு 33 ரன்களையும் எடுத்தனர். இதையடுத்து 171 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிங்கிய குஜராத் வீரர்கள் ஆரம்பம் முதலே நிதானமாக விளையாடி கனிசமாக ரன்களை சேர்ந்துவந்தனர்.

இறுதியில், 19.3 ஓவர்களிலேயே 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 174 ரன்களை குவித்து வெற்றிபெற்றனர். அதிகபட்சமாக, ராகுல் தெவாட்டியா 25 பந்துகளுக்கு 43 ரன்களை குவித்தார்.

அதோபோல, ஷுப்மான் கில் 28 பந்துகளுக்கு 31 ரன்களையும், டேவிட் மில்லர் 24 பந்துகளுக்கு 39 ரன்களையும் எடுத்தனர். மறுப்புறம் பந்துவீச்சில் வனிந்து ஹசரங்கா, ஷாபாஸ் அகமது தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர்.

இதையும் படிங்க:PBKS vs LSG: குர்னால் அபாரம்; பஞ்சாபை கட்டுப்படுத்திய லக்னோ!

ABOUT THE AUTHOR

...view details