குஜராத்: இந்தாண்டுக்கான ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த போட்டியில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைடன்ஸ், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய ராஜஸ்தான் வீரர்கள் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 130 ரன்களை மட்டுமே எடுத்தனர். அதிகபட்சமாக பட்லர் 35 பந்துகளுக்கு 39 ரன்களை எடுத்தார். அதோபோல ஜெய்ஷ்வால் 16 பந்துகளுக்கு 22 ரன்களையும், ரியான் பராக் 15 பந்துகளுக்கு 15 ரன்களை எடுத்தனர்.
இதனிடையே கேப்டன் சஞ்சு சாம்சன் 11 பந்துகளுக்கு 14 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். மறுப்புறம் பந்து வீச்சில் குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதேபோல சாய் கிஷோர் 2 விக்கெட்டுகளையும், யாஷ் தயால், முகமது ஷமி, ரஷித் கான் தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர்.