ஐபிஎல் தொடரின் ஆறாவது லீக் ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்து வீசுவதாக முடிவு செய்தது. இதைத் தொடர்ந்து பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய தேவ்தத் படிக்கல் 13 பந்துகளில் 11 ரன்களிலும், ஷபாஸ் அகமது 10 பந்துகளில் 14 ரன்களிலும் ஆட்டமிந்தனர். அணியின் தூண்களான விராட் கோலி 29 பந்துகளில் 33 ரன்னிலும், டிவில்லியர்ஸ் 5 பந்துகளில் 1 ரன்னிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர்.
கடைசிநேரத்தில் அணியின் நட்சத்திர வீரர் மேக்ஸ்வெல் சற்று அதிரடி காட்டியதால், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் எடுத்து ஹைதராபாத் அணிக்கு 150 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. பெங்களூரு அணியில் அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 47 பந்துகளில் 59 ரன்கள் எடுத்தார்.
ஹைதராபாத் அணி தரப்பில் ஹோல்டர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ரஷித் கான் 4 ஓவர்களில் 18 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்கார்களாக விருத்திமான் சஹா, கேப்டன் டேவிட் வார்னர் களமிறங்கினர்.