துபாய்: ஐபிஎல் 2021 சீசன் கரோனா தொற்றுப்பரவல் காரணமாக, பாதியில் ரத்துசெய்யப்பட்ட நிலையில், இத்தொடரின் இரண்டாம் கட்டப்போட்டிகள் கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பிளே-ஆஃப் சுற்றின் முதல் குவாலிஃபயர் போட்டியில், ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், எம்.எஸ். தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன
ஷா அதிரடி
துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில், டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி, பந்துவீச்சைத் தேர்வுசெய்தார். அதன்படி டெல்லி அணிக்கு, பிருத்வி ஷா, ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க வீரராக களமிறங்கினர்.
தொடக்கத்தில் இருந்தே பிருத்வி ஷா அதிரடியைத் தொடங்கினார். இருப்பினும், டாப்-ஆர்டர் பேட்ஸ்மேன் தவான் 7 (7), ஸ்ரேயஸ் ஐயர் 1 (8), அக்க்ஷர் படேல் 10 (11) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
5ஆம் விக்கெட் பாட்னர்ஷிப்
இதனிடையே, 27 பந்துகளில் பிருத்வி ஷா அரைசதம் கடந்தார். ஜடேஜா வீசிய 11ஆவது ஓவரில் மிட்-ஆஃப் திசையில் தூக்கி அடித்த ஷா, டூ பிளேசிஸ்ஸின் அபாரமான கேட்சால், 60 (34) ரன்களில் வெளியேறினார்.