துபாய்: ஐபிஎல் 2021 தொடரின் 52ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் - சென்னை அணிகள் மோதின. துபாய் சர்வதேச மைதானத்தில் இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சைத் தேர்வுசெய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய சென்னை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக டூ பிளேசிஸ் 76 (55) ரன்களை எடுத்தார். பஞ்சாப் அணி பந்துவீச்சில் கிறிஸ் ஜோர்டன், அர்ஷ்தீப் சிங் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ராகுலின் ராக்கெட்டுகள்
இதையடுத்து, பஞ்சாப் அணிக்கு கே.எல். ராகுல், மயாங்க் அகர்வால் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். தொடக்கம் முதலே ராகுல் அதிரடி ஆட்டத்தைக் கையாண்டார். இருப்பினும், ஷர்துல் வீசிய ஐந்தாவது ஓவரில் மயாங்க் அகர்வால் 12 (12), சர்ப்ரஸ் கான் 0 (3) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பவர்பிளே முடிவில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 51 ரன்களை எடுத்திருந்தது.
இதன்பின்னர், கே.எல். ராகுல் வேகமாக ரன்களை குவிக்கத்தொடங்கினார். இதனால், எட்டாவது ஓவரில் அரைசதம் கடந்து அசத்த, அடுத்த ஓவரில் ஷாருக் கான் 8 (10) ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.
சொதப்பிய சிஎஸ்கே