தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

IPL 2021: மும்பையிடம் பணிந்த பஞ்சாப் பேட்ஸ்மேன்கள்! - மும்பை இந்தியன்ஸ்

மும்பை அணிக்கு எதிரான லீக் போட்டியில், பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் 135 ரன்கள் எடுத்துள்ளது.

மும்பையிடம் பணிந்த பஞ்சாப் பேட்ஸ்மேன்கள்
மும்பையிடம் பணிந்த பஞ்சாப் பேட்ஸ்மேன்கள்

By

Published : Sep 28, 2021, 10:22 PM IST

அபுதாபி:ஐபிஎல் தொடரில் 42ஆவது லீக் ஆட்டத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, கே.எல். ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் இன்று மோதியது. இப்போட்டியில், டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, பஞ்சாப் அணிக்கு ராகுல், மந்தீப் சிங் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். பஞ்சாப் அணியின் முதல் விக்கெட்டை குர்னால் பாண்டியா வீழ்த்தினார். மந்தீப் சிங் 15, கெயில் 1, ராகுல் 21, பூரன் 2 ரன்கள் என வரிசையாக வெளியேறினர்.

மும்பை அபரா பந்துவீச்சு

இதையடுத்து, மார்க்ரம் - ஹூடா ஜோடி ஐந்தாவது விக்கெட்டுக்கு 61 ரன்களை எடுத்தனர். அப்போது, மார்க்ரம் 42 ரன்களுக்கு வெளியேற ரன் வேகம் உடனடியாக சட்டென குறைந்தது. தீபக் ஹூடாவும் 28 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 135 ரன்களை எடுத்துள்ளது.

ஹர்பிரீத் ப்ரர் 14 ரன்களுடனும், எல்லீஸ் 6 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். மும்பை பந்துவீச்சில் பொல்லார்ட், பும்ரா தலா 2 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இதையும் படிங்க: IPL 2021: டெல்லியை டம்மி ஆக்கிய கொல்கத்தா!

ABOUT THE AUTHOR

...view details