அகமதாபாத்: ஐபிஎல் தொடரின் 26ஆவது லீக் ஆட்டத்தில், பஞ்சாப் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் இன்று (ஏப்.30) மோதுகின்றன.
இப்போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி பஞ்சாப் அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தார். இந்தத் தொடரில் பெங்களூரு அணி விளையாடிய ஆறு போட்டிகளில் ஐந்தில் வென்று 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்திலும், பஞ்சாப் அணி ஆறு போட்டிகளில் இரண்டில் மட்டும் வென்று 4 புள்ளிகளுடன் ஆறாவது இடத்திலும் உள்ளன.
இதுவரை பஞ்சாப் அணியும், பெங்களூரு அணியும் மொத்தம் 26 போட்டிகளில் மோதி, பஞ்சாப் 14 போட்டிகளிலும், பெங்களூரு 12 போட்டிகளில் வென்றுள்ளன. பஞ்சாப் அணியில் மயாங்க் அகர்வால், மொய்சஸ் ஹென்ரிக்ஸ், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் நீக்கப்பட்டு பிராப்சிம்ரன் சிங், ஹர்பிரீத் ப்ரர், ரிலே மெரிடித் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். பெங்களூரு தரப்பில் வாஷிங்டன் சுந்தருக்குப் பதிலாக ஷபாஸ் அகமதிற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.