டெல்லி: ஐபிஎல் தொடரின் 24ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
நிதான தொடக்கம்
அதன்படி ராஜஸ்தான் தொடக்க வீரர்களாக ஜாஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் களமிறங்கினர். இந்தத் தொடரில் தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்த ராஜஸ்தான் அணியின் தொடக்கம் இப்போட்டியில் நன்றாக அமைந்தது. இருவரும் பலம் வாய்ந்த மும்பை பவுலிங்கை வெகு சிறப்பாக கையாண்டு, பவர்பிளே முடிவில் 47 ரன்களை குவித்தனர்.
செட்டிலாகி ஆடிவந்த டி காக் 41(32) ரன்களில் ராகுல் சஹாரிடம் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அவரைத் தொடர்ந்து ஜெய்ஸ்வால் 32(20) ரன்களில் ராகுல் சஹாரிடமே வீழ்ந்தார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த சிவம் டூபேவும், கேப்டன் சஞ்சு சாம்சனும் அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ஜெயந்த யாதவ் வீசிய 15ஆவது ஓவரில் 13 ரன்களும், போல்ட் வீசிய 16ஆவது ஓவரில் 14 ரன்களும் குவித்து ஆச்சரியப்படுத்தியது.
மூன்றாம் விக்கெட் பார்ட்னர்ஷிப்
கடைசி நேரத்தில் சாம்சன் 42(27) ரன்களிலும், சிவம் டூபே 35(31) ரன்களிலும் வெளியேற, இதன்மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்களை குவித்தது.
ராஜஸ்தான் அணியில் மில்லர் 7(4) ரன்களிலும், ரியான் பராக் 8(7) ஆட்டமிழக்கமால் இருந்தனர். மும்பை தரப்பில் ராகுல் சஹார் 2 விக்கெட்டுகளையும், போல்ட், பும்ரா தலா 1 விக்கெட்டுயும் வீழ்த்தினர்.
மும்பை அதிரடி
பின்னர், 172 ரன்கள் என்ற வெற்றி இலக்கை துரத்திய மும்பை அணிக்கு, குயின்டன் டி காக் - ரோஹித் சர்மா இணை நல்ல தொடக்கத்தை அளித்தது. குயின்டன் டி காக் ஆக்ரோஷமாக ஆட ரோஹித் சற்று பொறுமைக் காட்டினார்.
ஆறாவது ஓவரில் கடைசி பந்தில் ரோஹித் 14(17) ரன்களில் எடுத்தபோது மோரிஸ் பந்துவீச்சில் சக்காரியாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அதன்பின் வந்த சூர்யகுமார் யாதவ் 16(10) ரன்களில் வெளியேற குர்னால் பாண்டியா களம்கண்டார்.
வெற்றி வழிவகுத்த மும்பை கூட்டணி
அவருடன் இணைந்த டி காக் 35 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவு செய்தார். விக்கெட்டை இழக்காமல் கட்டுக்கோப்பாக இந்த இணை ரன் சேர்த்து வந்தது.
கடைசி 3 ஓவர்களில் 25 ரன்களே தேவைப்பட்ட நிலையில், குர்னால் பாண்டியா 39(26) ரன்களில் பெவிலியன் திரும்பினார். அடுத்து களமிறங்கிய பொல்லார்ட் சிக்சர், பவுண்டரிகள் என தெறிக்கவிட 18ஆவது ஓவரில் 16 ரன்களை குவித்து அசத்தியது மும்பை.
அடுத்த ஓவரிலும் இரண்டு பவுண்டரிகளை விரட்டி இத்தொடரில் தனது மூன்றாவது வெற்றியை மும்பை இந்தியன்ஸ் உறுதிசெய்தது.
மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வீழ்த்தி, இத்தொடரில் 3 போட்டிகளில் வென்று 6 புள்ளிகளுடன், புள்ளிப்பட்டியலில் நான்காம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
ராஜஸ்தான் அணி தரப்பில் மோரிஸ் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
ஆட்டமிழக்காமல் 70 ரன்களை குவித்த குயின்டன் டி காக் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.
இதையும் படிங்க: IPL 2021 KKR vs DC: டாஸ் வென்ற டிசி; கேகேஆர் பேட்டிங்