மும்பை:ஐபிஎல் தொடரின் 16ஆவது லீக் ஆட்டத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளும் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடக்க வீரர்கள் ஜாஸ் பட்லர், மனன் வோரா ஆகியோர் களமிறங்கினர். அனுபவ வீரர் பட்லர் 8(8) ரன்களுக்கு சிராஜ் பந்துவீச்சில் தனது விக்கெட்டை இழந்தார்.
அதனைத்தொடர்ந்து மனன் வோரா 7(9) ரன்களிலும், டேவிட் மில்லர் 0(2) ரன்னிலும், கேப்டன் சஞ்சு சாம்சன் 21(18) ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். அப்போது ராஜஸ்தான் அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 43 ரன்கள் எடுத்திருந்தது.
அதன்பின் ஜோடி சேர்ந்த சிவம் டூபே - ரியான் பாரக் ஆகியோர் சிறிது நேரம் அதிரடி காட்டினர்.இருப்பினும் ரியான் பராக் 25(16) அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். இந்த இணை 66 ரன்களை சேர்த்து அணிக்கு ஆறுதல் அளித்தது.
பராக் வெளியேற பின்னர், டூபேவும் 46(32) ஆட்டமிழந்து தனது அரைசதத்தைத் தவறவிட்டார். மறுமுனையில் வேகமாக ரன்களை சேர்த்து வந்த திவாத்தியா 23 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து சிராஜ் பந்துவீச்சில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். கடைசி ஓவரில் ஹர்ஷல் பட்டேல் பந்துவீச்சில் மோரிஸ் 10(7) ரன்களிலும், சக்காரியா ரன் ஏதும் எடுக்காமல் வெளியேற, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்களை குவித்தது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு தரப்பில் சிராஜ், ஹர்ஷல் பட்டேல் ஆகியோர் தலா 3 விக்கெட்டை வீழ்த்தினர்.
இதையும் படிங்க: IPL 2021 RCB vs RR: "எனக்கு டாஸ் விழுந்துருக்கா" கோலி ஆச்சரியம்