தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

டி20 கிரிக்கெட்: 2-வது ஆட்டத்தில் இலங்கையுடன் இந்தியா இன்று மோதல் - t20 match today in pune

இலங்கை அணிக்கு எதிரான 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் டி20 தொடரை கைப்பற்றும்.

இலங்கையுடன் இந்தியா இன்று மோதல்
இலங்கையுடன் இந்தியா இன்று மோதல்

By

Published : Jan 5, 2023, 8:37 AM IST

Updated : Jan 5, 2023, 3:47 PM IST

புனே: இந்தியா இலங்கை அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. மும்பையில் நேற்று முன்தினம் (ஜன.3) நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் 3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது.

163 ரன்கள் இலக்குடன் விளையாடிய இலங்கை அணி ஆட்டத்தை கடைசி பந்து வரை எடுத்துச் சென்று 160 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்நிலையில் 2-வது ஆட்டம் புனேவில் இன்று (ஜன.5) இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் பட்சத்தில் டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றும்.

இதையும் படிங்க: TODAY HOROSCOPE: ஜன.5 இன்றைய ராசிபலன்

Last Updated : Jan 5, 2023, 3:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details