தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

DC VS GT : டெல்லி அணி அபார வெற்றி! - குஜராத் டெல்லி கேபிட்டல்ஸ்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் குஜராத் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது.

IPL 2023
IPL 2023

By

Published : May 2, 2023, 11:08 PM IST

அகமதாபாத் : ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி வெற்றியை நோக்கி பயணித்து வருகிறது.

16வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நாடு முழுவதும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் இரவு 7:30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வரும் 44வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி, டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதின.

டாஸ் வென்ற டெல்லி கேப்டன் டேவிட் வார்னர் பேட்டிங்கை தேர்வு செய்தார். டெல்லி அணியின் இன்னிங்சை விக்கெட் கீப்பர் பிலிப் சால்ட்டும், கேப்டன் டேவிட் வார்னரும் தொடங்கினர். ரன் கணக்கை தொடங்கும் முன்னரே டெல்லி அணி விக்கெட் கணக்கை தொடங்கியது. முகமது ஷமி வீசிய பந்தில் தொடக்க வீரர் பிலிப் சால்ட் (0 ரன்), டேவிட் மில்லரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

மறுபுறம் கேப்டன் டேவிட் வார்னர் தேவையில்லாமல் ஒரு ரன்னுக்கு ஆசைப்பட்டு ரன் அவுட்டில் தன் விக்கெட்டை இழந்தார். குஜராத் வீரர் ரஷித் கான் துல்லியமாக வீசி வார்னரின் விக்கெட்டை கபளீகரம் செய்தார். அடுத்தடுத்து களமிறங்கிய டெல்லி வீரர்கள் பெரிய அளவில் சோபிக்கவில்லை.

பிரியம் கார்க் 10 ரன், ரில்லே ரோஸ்சவ் 8 ரன், மணீஷ் பாண்டே 1 ரன் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து நடையை கட்டினர். அக்சர் பட்டேல் மட்டும் அமன் ஹக்கின் கான் ஆகியோர் அணியின் நிலையை உணர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிரரியாக ஆடிய அமன் ஹக்கிம் கான் அரை சதம் அடித்தார்.

51 ரன் விளாசிய அமன் ஹக்கிம் கான் அணியின் ஸ்கோரை நல்ல நிலைக்கு கொண்டு சென்றார். மறுபுறம் அக்சர் 27 ரன், ரிபல் பட்டேல் 21 ரன் என அணி கவுரமான ஸ்கோரை எட்ட உதவினர். 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 8 விக்கெட் இழப்புக்கு டெல்லி அணி 130 ரன்கள் குவித்தது.

131 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய குஜராத் அணிக்கு ஆட்டம் சரியாக அமையவில்லை. சொந்த ஊரில் அந்த அணி வீரர்கள் சொதப்பினர். சீரான இடைவெளியில் குஜரத் அணியின் விக்கெட் வீழ்ந்த வண்ணம் இருந்தது. 19 புள்ளி 1 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு குஜராத் அணி 121 ரன்கள் குவித்து வெற்றிக்காக போராடி வந்தது. இறுதியில் டெல்லி அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதையும் படிங்க :DC Vs GT : டாஸ் வென்று டெல்லி பேட்டிங்! குஜராத்திடம் பழிக்குமா டெல்லியின் ஆட்டம்!

ABOUT THE AUTHOR

...view details