சென்னை:ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 17வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, ராஜஸ்தான் அணியில் ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர் ஆகியோர் ஆட்டத்தை தொடங்கினர். 10 ரன்கள் எடுத்தபோது தேஷ்பாண்டே பந்துவீச்சில், ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்தார். தேவ்தத் படிக்கல் 38 ரன்களிலும், கேப்டன் சஞ்சு சாம்சன் ரன் ஏதும் எடுக்காமலும் வெளியேறினர்.
இதனைத் தொடர்ந்து ஜோஸ் பட்லருடன், ரவிச்சந்திரன் அஸ்வின் ஜோடி சேர்ந்தார். சிறப்பாக விளையாடிய பட்லர் 52 ரன்களில் ஆட்டமிழந்தார். அஸ்வின் 30 ரன்களில் வெளியேறினார். துருவ் 4, ஹோல்டர் 0, ஆடம் ஸம்பா 1 என அடுத்தடுத்து வெளியேறினர். எனினும் மறுமுனையில் சிறப்பாக விளையாடிய ஹெட்மேயர் 18 பந்துகளில் 30 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 8 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது.