தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

கொல்கத்தா வீரர்களுக்கு கரோனா...இன்றைய ஐபிஎல் போட்டி ஒத்திவைப்பு! - சந்தீப் வாரியர்

கொல்கத்தா அணியின் 2 வீரர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதியானதையடுத்து, இன்று நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டி ஒத்திவவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

KKR
கொல்கத்தா

By

Published : May 3, 2021, 1:37 PM IST

ஐபிஎல் தொடரின் 30ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் இன்று மோத இருந்தது.

இந்நிலையில், கொல்கத்தா அணியில் விளையாடும் வருண் சக்ரவர்த்தி, சந்தீப் வாரியர் ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மற்ற வீரர்களுக்கும் கரோனா தொற்று பரிசோதனை செய்யப்படவுள்ளது.

இதையடுத்து, இன்றைய ஐபிஎல் போட்டி ஒத்திவைக்கப்படுவதாகவும், அதனை மே 30ஆம் தேதி நடத்திட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது பயோ பபுளில் உள்ள வீரர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, ஏப்ரல் 29ஆம் தேதி, அகமதாபாத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் கொல்கத்தா விளையாடியது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details