தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

தோனிக்காகக் காத்திருக்கிறது சென்னை: ஸ்டாலின் அடித்த விசில்! - 2021 IPL CHAMPIONS

ஐபிஎல் 2021 தொடரின் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின், stalin, ms dhoni, dhoni, dhoni stalin
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து

By

Published : Oct 16, 2021, 10:17 AM IST

சென்னை: துபாய் பன்னாட்டு மைதானத்தில் நேற்று (அக். 15) நடைபெற்ற ஐபிஎல் இறுதிப் போட்டியில் கொல்கத்தா அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, நான்காவது முறையாக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது.

இந்நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துக் குறிப்பில், "நான்காவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றதற்கு, சென்னை அணியில் விளையாடி அனைத்து வீரர்கள், உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் ஆகிய அனைவருக்கும் வாழ்த்துகள்.

அன்புடன் வரவேற்கிறது

எம்.எஸ். தோனி, இந்த வெற்றியைக் கொண்டாட சென்னை அன்புடன் (Anbu DEN - சென்னை நகரத்தை சிஎஸ்கே அணியின் அன்பான குகை என்று ரசிகர்கள் அழைப்பது வழக்கம்) காத்திருந்திருக்கிறது" எனக் கூறியுள்ளார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து

2011இல் இந்தியா ஒருநாள் உலகக் கோப்பையை வென்றபோது, அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி, தோனி, ரெய்னா, தமிழ்நாடு வீரர் அஸ்வின் ஆகியோருக்குப் பாராட்டு விழா எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: IPL 2021: 4-வது முறையாக ஐபிஎல் கோப்பையை முத்தமிட்டார் தோனி

ABOUT THE AUTHOR

...view details