மும்பை:இன்று (மார்ச் 27) மாலை நடைபெற்ற ஐபிஎல்., 2022இல் இரண்டாவது ஆட்டமான மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டி, மும்பை பார்போன் மைதானத்தில் நடைபெற்றது.
ஐபிஎல் 2022: டெல்லியிடம் வீழ்ந்த மும்பை! - மும்பை இந்தியன்ஸ்
இன்று (மார்ச் 27) நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
மும்பை vs டெல்லி: பல்தான்ஸை பந்தாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ்
டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த் பவுலிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த மும்பை அணி, 177 (20) ரன்களை குவித்து 5 விக்கெட்களை இழந்தது.
மும்பையில் அதிகபட்சமாக இஷாந்த் கிஷன் 81 (48) ரன்கள் குவித்தார். அடுத்து களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, 18.2 ஓவர்களில் 179/6 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக லலித் யாதவ் 48*(38) ரன்கள் குவித்து தன் அணியை வெற்றி பெற செய்து ஆட்ட நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.