தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

கொல்கத்தாவை பழிதீர்க்குமா சென்னை?

துபாய்: ஐபிஎல் 2020 கிரிக்கெட் தொடரின் 49ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் இன்று (அக்டோபர் 29) மோதுகின்றன.

  கொல்கத்தாவை பழிதீர்க்குமா? சூப்பர் கிங்ஸ்!!
கொல்கத்தாவை பழிதீர்க்குமா? சூப்பர் கிங்ஸ்!!

By

Published : Oct 29, 2020, 10:29 AM IST

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் தொடரின் 13ஆவது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் நடந்துவருகிறது. இத்தொடரின் 49ஆவது லீக் போட்டி துபாயில் இன்று (அக்டோபர் 29) நடைபெறுகிறது. இதில், புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஐந்தாவது இடத்தில் உள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் தோல்வியடைந்தால் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பு பறிபோகிவிடும் என்பதால் வெற்றிக்காக கொல்கத்தா அணி இன்றைய போட்டியில் வெற்றிப்பெற கடுமையாக போராடும். அதே நேரத்தில், ஐபிஎல் தொடரில் முதல் முறையாக பிளே ஆஃப் சுற்றிக்கு தகுதிப்பெறும் வாய்ப்பை இழந்து ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாகிய சிஎஸ்கே அணி, எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளில் ஆறுதல் வெற்றி பெற்று ரசிகர்களின் நம்பிக்கையை தக்க வைக்க முயற்சிக்கும்.

இந்த போட்டியில் கொல்கத்தா அணி தோல்வியடைந்தால், பிளே ஆஃப் சுற்றிற்கு தகுதி பெறும் வாய்ப்பு பறிபோகும். ஆகையால் ரசிர்கர்கள் மத்தியில் இப்போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

ABOUT THE AUTHOR

...view details